இந்த ஆண்டு கொரோனா மருந்து கிடைக்காது! 2021ல் தான் கிடைக்கும்! WHO அறிவிப்பு!

23 July 2020 அரசியல்
whoonindia.jpg

இந்த ஆண்டு கொரோனாவிற்கு மருந்து கிடைக்காது எனவும், அடுத்த ஆண்டு தான் கொரோனாவிற்கு மருந்து கிடைக்கும் என, உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மைக் ரியன், தற்பொழுது உலகம் முழுக்கப் பரவியுள்ள கொரோனா வைரஸினைக் குணப்படுத்தும் முயற்சியில் பல நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. இதில், 100க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இறுதிக் கட்ட சோதனையில் உள்ளன. இவைகளில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், இவை எதுவும் தற்பொழுது வரை தோல்வியடையவில்லை.

இவைகள் அனைத்தும் உடல் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்தும், கொரோனாவினை வீழ்த்தும் வலிமையுடன் இருப்பதாக தெரிவித்தார். எவ்வாறு இருப்பினும், இந்த ஆண்டு கொரோனா வைரஸிற்கு மருந்து கிடைக்கும் சாத்தியக் கூறுகள் இல்லை எனவும், பொதுமக்கள் கட்டாயம் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், கொரோனா பரவி வருகின்ற சூழலில் பள்ளிகளைத் திறப்பது ஆபத்தானது எனவும், என்னை எப்பொழுது பள்ளிகளைத் திறக்கலாம் என்றுக் கேட்டால், கொரோனா முற்றிலும் ஒழிந்ததும் பள்ளிகளைத் திறக்கலாம் என்றுக் கூறுவேன் என்று பேசினார். அமெரிக்க தற்பொழுது 1.92 பில்லியன் டாலர்களை, ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

இந்தப் பணமானது, 100 கோடி கொரோனா மருந்து டோஸ்களுக்காக வழங்கப்பட்டு உள்ளது. இந்த பயோன்டெக் நிறுவனம் தான், தற்பொழுது கொரோனாவிற்கான மருந்து தயாரிக்கும் முயற்சியில் முன்னணியில் உள்ளது. அமெரிக்காவிற்கே முதலில் மருந்து வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. உலகளவில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக, அமெரிக்கா உள்ளது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS