எதிர்காலம் மோசமாக இருக்கும்! இயல்புநிலை கண்களுக்குத் தெரியவே இல்லை!

14 July 2020 அரசியல்
whochief.jpg

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டே இருப்பதாகவும், இதனால், இயல்பு வாழ்க்கைக்கான அறிகுறிகள் கண்களுக்குத் தெரியவில்லை எனவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இறுதியில், சீனாவில் இருந்து உலகம் முழுக்க கொரோனா வைரஸானது பரவியது. இதனால், தற்பொழுது வரை, ஒன்றேகால் கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 6 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பால் அமெரிக்கா தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு நாளுக்கு நாள், கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இந்த வைரஸிற்கு, மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் வேகமாகச் செயல்பட்டு வருகின்றன. 110க்கும் அதிகமான மருந்துகள், தற்பொழுது பரிசோதனையில் உள்ளன. இந்த சூழ்நிலையில், உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் செய்தியாளர்களுக்கு நேற்றுப் பேட்டியளித்தார். அவர் பேசுகையில், தற்பொழுது நிலவும் சூழ்நிலைகள் சாதகமாக இல்லை என்றார்.

அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் இந்த விஷயத்தில் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டிய தருணம் இது. ஆனால், அவ்வாறு செய்யாமல், இருப்பது கவலை அளிக்கக் கூடியதாக இருப்பதாக அவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே இருப்பதால், இயல்பு வாழ்க்கை சகஜமாகும் காலம், கண்களுக்குத் தெரியவே இல்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த நிலை நீடித்தால், எதிர்காலம் கேள்விக்குறியாகும் என கவலைத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS