சிறு தவறு செய்தாலும் நீண்ட காலத்திற்கு இந்த வைரஸ் இருக்கும்! WHO கவலை!

23 April 2020 அரசியல்
tedrosadhanomwho.jpg

ஒரு சிறுத் தவறு செய்தாலும், இந்த வைரஸானது நீண்ட காலத்திற்கு நம்மை பாதிக்கின்ற சூழ்நிலை உருவாகிவிடும் என, உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

உலகம் முழுக்க, கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸால் 26,23,415 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் தொற்றில் இருந்து, 7,09,694 பேர் மீண்டுள்ளனர். 1,83,027 பேர் மரணமடைந்து உள்ளனர்.

இந்த வைரஸ் தொற்றுக் காரணமாக உலக நாடுகள் பலவும், ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்து உள்ளன. உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் இந்த வைரஸால் 40,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். அங்கு, ஊரடங்கினைத் தொடர்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். இதனிடையே, உலக சுகாதார மையம் சார்பில், அதன் தலைவர் டெட்ரோஸ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசுகையில், தற்பொழுது இந்த வைரஸானது உலகின் பல நாடுகளில் பரவி வருகின்றது. இதனால், பலர் மரணமடைந்து உள்ளனர். தற்பொழுது இந்த வைரஸானது ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவ ஆரம்பித்து உள்ளது. இது வருத்தம் அளிப்பதாக, அவர் தெரிவித்தார்.

நாங்கள் ஜனவரி 30ம் தேதி அன்று, மெடிக்கல் எமர்ஜென்சியினை சரியாக அறிவித்தோம். இப்பொழுது, நாம் சரியாக செயல்படாமல், சிறு தவறு செய்தால் கூட, பல ஆண்டுகளுக்கு நாம் கஷ்டப்பட வேண்டி இருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். உலகின் பல நாடுகள், தற்பொழுது ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளன. அதனை வைத்துக் கொண்டு, இந்த வைரஸ் அந்த நாடுகளில் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டதாக நினைத்து விடக் கூடாது என்று கூறியுள்ளார்.

HOT NEWS