விரைவில் இரண்டாவது அலை! உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள WHO!

26 May 2020 அரசியல்
whochief.jpg

உலகம் முழுவதும், அனைத்து நாடுகளும் பின்பற்றுகின்ற ஊரடங்கு உள்ளிட்ட விஷயங்களை, வேகமாகத் தளர்த்தினால், இரண்டாவது அலைப் பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக WHO தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் என எந்த விதிவிலக்கும் இல்லாமல், பல நாடுகள் இந்த கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக, பல லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.

இந்த வைரஸ் குறித்து தினமும் புதிய தகவல்களையும், அறிவுரைகளையும் உலக சுகாதார மையம் அறிவித்து வருகின்றது. அப்படி இன்றைய அறிவிப்பில், தற்பொழுது அமலில் உள்ள சமூக இடைவெளி, ஊரடங்கு உள்ளிட்ட விஷயங்களில் தளர்வுகளை உருவாக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

அவ்வாறு, தளர்வுகளை ஏற்படுத்தினால், கண்டிப்பாக நோய் தொற்று அதிகரிக்க ஆரம்பித்துவிடும் என எச்சரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸின் முதல் அலை பரவி உள்ளது எனவும், எப்பொழுது வேண்டும் என்றாலும், இரண்டாவது அலை பரவ வாய்ப்புகள் உள்ளதாகவும், எச்சரித்துள்ளது. எனவே, ஊரடங்கினை தொடர்ந்து அமலில் வைத்திருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.

HOT NEWS