ஹரியானாவில் தொடரும் இழுபறி! யாருக்கு ஆதரவு விரைவில் தகவல்!

25 October 2019 அரசியல்
haryanaelection.jpg

ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஜன்யாக் ஜனதா கட்சி யார் பக்கம் என்றத் தகவல், இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின், வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில், பாஜக 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் வென்றது. ஜன்யாக் ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது பெரும் கட்சியாக மாறியுள்ளது. ஏழு தொகுதிகளில், சுயேட்சை எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஹரியானாவில் ஆட்சியமைக்க 46 தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும். தற்பொழுது பாஜக 41 தொகுதிகளில் வென்றுள்ளது. இந்நிலையில், தன்னை பாஜக ஆதரவு கேட்டு அனுகவில்லை எனவும், நான் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை எனவும், ஜன்யாக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந் சவுதாலா கூறியுள்ளார். இது குறித்து அவர், ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.

இந்நிலையில், 7 சுயேட்சைகளின் ஆதரவு இருந்தாலே, பாஜக ஆட்சி அமைக்க இயலும் என்பதால், அந்த சுயேட்சை எம்எல்ஏக்களை குறி வைத்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றது பாஜக.

HOT NEWS