பிக்பாஸ் போட்டியின் இறுதி நிகழ்ச்சியில், யார் ஜெயிப்பார் என தற்பொழுது கணிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் மக்களிடம் மிகுந்த வரவேற்பினை பெற்ற நிகழ்ச்சியாக, விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியானது இருந்து வருகின்றது. இந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்களும் கடந்த ஆண்டுகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தன. ரசிகர்களும் தங்களுடைய பலத்த ஆதரவினை வழங்கி வந்தனர். இந்த மூன்று சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வந்தார். இந்த மூன்று சீசன்களின் காரணமாக, விஜய் டிவியின் டிஆர்பியானது எக்குத்தப்பாக எகிறியது.
இந்த சூழலில், மிகுந்த எதிர்பார்ப்புடன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது கடந்த ஆண்டு தொடங்கியது. இதனையும், உலக நாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். இதில், பல விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனுக்கு மட்டும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இருப்பினும், பாலாஜிக்கும், நடிகர் ஆரிக்கும் இடையில் ஏற்பட்ட உரசல் காரணமாக, மீண்டும் டிஆர்பி இந்த சீசனில் எகிறத் துவங்கியது.
பாலாஜியினைக் காட்டிலும், ஆரிக்கு தான் தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. இந்த சீசனின் இறுதி நிகழ்ச்சியானது தற்பொழுது துவங்கி உள்ளது. இதில், ஆரி தான் வெல்வார் எனப் பலரும் கணித்து வருகின்றனர். ஆனால், பாலாஜி தான் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எவ்வாறென்றால், எப்பொழுதும் நாம் கணிப்பதற்கு மாறாகவே, விஜய் டிவியில் நடைபெறுகின்ற பிக்பாஸ் போட்டியின் முடிவுகள் இருந்துள்ளன.
முதல் சீசனில் சினேகன் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் வெல்லவில்லை. அதே போல் தான் அனைத்து சீசன்களுமே. அதனை வைத்து பார்க்கும் பொழுது, இந்த சீசனில் ஆரிக்கு பதில் பாலாஜியே வெல்வர் என தெரிகின்றது.