கொரோனா நீண்ட காலம் இருக்கும்! எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்த WHO!

03 August 2020 அரசியல்
whochief.jpg

கொரோனா வைரஸானது, இந்தப் புவியில் நீண்ட காலம் இருக்கும் என, உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம், சீனாவில் உள்ள ஊஹான் பகுதியில் இருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. தற்பொழுது வரை ஒரு கோடியே 90 லட்சம் நபர்கள், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு கோடியே பத்து லட்சம் பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீட்டுள்ளனர். 7 லட்சம் பேர் மரணமடைந்து உள்ளனர்.

இந்த வைரஸிற்கு எதிராக, உலகின் முன்னணி நாடுகள் பலவும் தற்பொழுது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. இதில், இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவின் மருந்துகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இது குறித்து, தினமும் உலக சுகாதார அமைப்பானது, தங்களுடைய தகவலை தெரிவித்து வருகின்றது.

அதன்படி, தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதில், இந்த வைரஸானது நீண்ட காலம் இப்புவியில் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து, பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த வைரஸால், சமூக ஒருமைப்பாடும், பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் மாற்றம் குறித்து தற்பொழுது ஆய்வுகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளது.

HOT NEWS