திமுக ஏன் பிகேவினை நாடியது தெரியுமா?

17 August 2020 அரசியல்
prashantkishor.jpg

திராவிட முன்னேற்றக் கழகம் பற்றி தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். இந்தியாவின் முக்கியமானக் கட்சிகளுள் ஒன்றாக திமுக உள்ளது. இதன் தலைவராக தற்பொழுது முகஸ்டாலின் உள்ளார். இவர் மறைந்த முன்னாள் தலைவர் முகருணாநிதியின் மகன் ஆவார்.

தற்பொழுது திமுக கட்சியானது, தேர்தல் ஆலோசகர் மற்றும் தேர்தலை கணித்து வெற்றியினை பெற்றுத் தருகின்ற பிகே எனும் பிரசாந்த் கிஷோரின் ஆதரவினை நாடியுள்ளது. இது எதற்காக எனப் பலரும், பலவிதமாகப் பேசி வருகின்றனர். இது குறித்த உண்மையினை நாம் இங்குப் பார்ப்போம்.

திமுகவின் தற்போதைய தலைவராக இருக்கும் முகஸ்டாலின், அவருடைய அண்ணன் முக அழகிரியினை ஓரம் கட்டிவிட்டு, தலைவர் பதவிக்கு வந்தவர். திமுக தலைவராக கருணாநிதி இருந்த காலத்திலேயே, முக அழகிரி கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்டனர். இந்த சூழ்நிலையில், நடந்து முடிந்து நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியானது, நாற்பது தொகுதிகளில் 39 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது.

அடுத்த 2021ம் ஆண்டு மே மாதம், தமிழக சட்டமன்றத் தேர்தலானது நடைபெற உள்ளது. அதில் திமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், அதிமுக கூட்டணி, ரஜினியின் புதிய கட்சி பல முனைப் போட்டியானது நடைபெறும் வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில், பிரசாந்த் கிஷோர் உள்ளே வந்தார் என்றால், திமுகவும், அதிமுகவும் கணித்த இடங்களை சரியாக வெல்ல இயலாது. காரணம், பிகேவின் செயல்கள் அந்த விதத்தில் இதுவரை இருந்து வந்துள்ளன.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே, பிகேயிடம் ஆதரவு கேட்டன. ஆனால், அவரோ திமுகவிற்கு கைக் கொடுத்துள்ளார். திமுக அவர்களை நோக்கிச் செல்லக் காரணம், தாம் பெறுகின்ற வெற்றியினை மிகப் பிரம்மாண்ட வெற்றியாக மாற்ற வேண்டும் என்பதற்காக என, அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகின்றது.

ஒருவேளை அதிமுகவிற்கு பிகே சென்றிருந்தால், திமுகவிற்கு கிடைக்கும் வெற்றியானது, பெரிய அளவில் இருக்காது. எனவே, தான் பிகேயினை தன் பக்கம் வளைத்துப் போட்டது திமுக. அதே போல், ஏன் பிகே திமுகவினைத் தேர்வு செய்தார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். பிகே யாருக்கெல்லாம் வேலை செய்கின்றாரோ, அவர்கள் எல்லாரும் வெற்றி பெறுகின்றனர் என்றப் பிம்பம் உருவாகி உள்ளது.

திமுகவின் தற்போதைய செல்வாக்கினைக் கணித்த பின்னரே, பிகே திமுகவிற்கு வேலை செய்ய முடிவு செய்துள்ளார். ஒரு வேளை, திமுகவிற்கு வேலை செய்யாமல் மற்றக் கட்சிகளுக்கு வேலை செய்து தோல்வியடைந்தால், கண்டிப்பாக பிகேயின் மதிப்பானது, இந்திய அளவில் குறையும் வாய்ப்புகள் உள்ளன. இவைகள் மூலக் காரணமாக, பிகே மற்றும் திமுக கூட்டிற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகின்றது.

HOT NEWS