கைலாசா என்ற ஒரு நாட்டினை உருவாக்கி, அதில் புதிய நாடாளுமன்றத்தினையும் உருவாக்கி உள்ளார் நித்தியானந்தா. அந்த நாட்டிற்காக தற்பொழுது, விநாயகர் சதுர்த்தி அன்று, பொருளாதாரம் மற்றும் பணத்தினைப் பற்றிய அறிவிப்பினையும் வெளியிட்டு உள்ளார்.
இதற்குப் பலரும் ஆதரவும், ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து உள்ளார்கள். இந்திய சட்டப்படி, இது குற்றம் எனவும் இவ்வாறு செய்யக் கூடாது எனவும் பலர் கூறுகின்றனர். இந்த நிலையில், அவரோ தங்கத்தில் நாணயங்களை அச்சடித்து வெளியிட்டு உள்ளார். ஏன் இவர் தங்கத்தில் நாணயங்களை அச்சடித்து உள்ளார் என்பதற்கானப் பல விவரங்கள் தற்பொழுது கிடைத்துள்ளன.
சாதாரண காகிதத்தில் பணத்தினை அச்சடித்தால், அதனை பிற நாடுகள் ஏற்றுக் கொள்ளாது. அதே சமயம், கள்ளநோட்டு அடிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், தங்கத்தில் கள்ளநோட்டினை அச்சடிக்க இயலாது. அதே போல், தங்கத்தில் உருவாக்கப்பட்ட எதையும், எங்கும் பயன்படுத்தலாம். விற்கலாம், வாங்கலாம். அதனை பணமாக இந்தியா உட்பட எந்த அரசாங்கமும் ஏற்காவிட்டாலும், தங்கமாக அதனை ஏற்றுக் கொள்ளும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இந்த தங்கத்தினை நாம் அடகுக் கடையில் வைக்க இயலும். நகைக்கடைகளில் விற்க இயலும். இதனை விற்று அந்தந்த நாட்டுப் பணமாக, மாற்றிக் கொள்ள இயலும். இவ்வளவு சாமர்த்தியமாக இந்த தங்க நாணயத்தினைப் பயன்படுத்த இயலும். இவ்ளவுக் காரணங்களை ஆய்வு செய்தே, நித்தியானந்தா இந்த திட்டத்தில் குதித்து உள்ளார். இதனைப் பலரும் கிண்டல் செய்து கொண்டு இருக்கின்றனர் என்றாலும், அவரோ அதனைப் பற்றி எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை.
தொடர்ந்து தான் என்ன செய்ய நினைக்கின்றோரா, அதனை செய்து கொண்டே உள்ளார். இதற்கு சிவனும், சக்தியும், காலபைரவரும் துணை இருப்பதாகக் கூறுகின்றார். அதே போல், அவர் ஈக்குவேடார் நாட்டிற்கு அருகில் உள்ள ஒரு தீவினை வாங்கியிருப்பதாக, அனைத்து ஊடகங்களும் கூறி வருகின்றன. இருப்பினும், அது எந்தளவிற்கு உண்மை என்பது யாருக்கும் தெரியாது.
அதே போல், அவர் தினமும் வீடியோக்களை, இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். அப்படிப் பார்க்கையில், அவர் இந்தியாவினை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பு இல்லை எனப் பலரும் தங்களுடையக் கருத்துக்களை கூறி வருகின்றனர்.