இவர் ஏன் வைக்கம் வீரர் என அழைக்கப்படுகின்றார் தெரியுமா?

24 April 2020 அரசியல்
periyar2.jpg

தமிழகத்தின் பகுத்தறிவு பகலவன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் ஈவேரா. அவர் சிறந்த சீர்த்திருத்தவாதியாகவும் போற்றப்படுகின்றார். அவர் செய்த செயல்களை, தமிழகத்தின் பள்ளிகளில் பாடமாக்கியுள்ளனர்.

அந்த அளவிற்கு அவரின் அர்பணிப்பு மற்றும் சமூக அக்கறையானது, அபரிதமானது. அவரை அனைவரும் ஏன், வைக்கம் வீரர் என அழைக்கின்றார்கள் எனப் பார்ப்போம். கேரளாவில் உள்ள கோயில்களில், தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருந்த காலம். அப்பொழுது, திருவாங்கூர், கொச்சின், மலபார் என்ற மூன்று சமஸ்தானங்களின் கட்டுப்பாட்டில் கோயில்கள் இருந்தன. இது கேரளாவில் மட்டுமின்றி, இந்தியாவின் பலப் பகுதிகளிலும் பின்பற்றப்பட்டு வந்தன.

இதனைக் கேள்விப்பட்ட பெரியார், தன்னுடைய ஆதரவாளர்களுடன் கேரளா நோக்கிக் கிளம்பினார். அங்கு ஏற்கனவே இதற்காகப் போராடி வந்த டிகே மாதவன், கேபி கேசவா மேனன் ஆகியோர கைது செய்யப்பட்டு இருந்தனர். அக்டோபர் ஒன்றாம் தேதி 1924ம் ஆண்டு, சவர்னாஸ் எனப்படும் மேல்தட்டு சாதியினைச் சேர்ந்தவர்கள், ஒரு ஊர்வலம் சென்றனர்.

அந்த ஊர்வலத்தினைத் தொடர்ந்து, திருவாங்கூரில் பொறுப்பில் இருந்து வந்த ரீஜண்ட் மகாராணி சேதுலட்சுமி பாய் என்பவரிடம், 25,000 கையெழுத்துக்களுடன் கூடிய மனு ஒன்றினை அளித்தனர். அதில், அனைவரும் கோயிலுக்குள் வர அனுமதிக்க வேண்டும் என்றுக் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களைப் போல, சேதுலட்சுமி பாயிடம், மகாத்மா காந்தியும் சந்தித்து பேசினார். அந்த ஊர்வலத்தினை மன்னாத் பத்மநாபன் என்பவர் தலைமையேற்று நடத்தினர். 500 பேருடன் ஆரம்பித்த அந்த ஊர்வலம், 5000 பேராக பெரிய அளவில் உருமாறியது. கேரளாவின் வைக்கம் என்றப் பகுதியில் இருந்தக் கோயில்கள், திருவாங்கூர் ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தன. அங்கு, பிற்படுத்தப்பட்டவர்களை ஹரிஜன்ஸ் என அழைக்கப்பட்டு வந்தனர். அவர்கள் கோயிலுக்குள் வரத் தடை நீடித்தது.

இதனால், பிப்ரவரி 14ம் தேதி அன்று, தனது மனைவி நாகம்மாளுடன் பெரியார் அங்கு போராட்டம் நடத்தப் புறப்பட்டார். அங்கு அவரும், அவருடைய மனைவியும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர், பல அரசியல் காரணங்கள், அரசியல்வாதிகளின் தலையீடுகள் காரணமாக, கோயில்களுக்குள் அனைத்து ஜாதியினரும் அனுமதிக்கப்பட்டனர். அன்று முதல், வைக்கம் வீரர் என, தந்தை பெரியாரை அழைத்து வருகின்றனர்.

HOT NEWS