இங்கு மட்டும் ஏன் இவ்வளவு கொரோனா பாதிப்பு?

25 June 2020 அரசியல்
lockdownmigrant.jpg

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பானது, அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தமிழகத்தில் உள்ள சென்னை, டெல்லி, அஹமதாபாத் தானே, புனே, இந்தூர், ஜெய்பூர், ஜோத்பூர் மற்றும் சூரத் ஆகியப் பகுதிகளில் தான், இந்த கொரோனா வைரஸானது அதிகளவில் பரவி உள்ளது.

இங்கு மட்டும் ஏன் இவ்வளவு அதிகளவில் பரவி இருக்கின்றது. ஏன், இந்த இடங்களில் பரவி உள்ளது என்பது பற்றி விவரிக்கின்றது இந்த செய்தித் தொகுப்பு.

இந்தியாவில் தற்பொழுது 4,85,000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில், 15,000 பேர் பலியாகி உள்ளனர். மூன்று லட்சம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் பலரும், கொரோனாவிற்கான அறிகுறிகள் இல்லாமலேயே நோய் தொற்று உள்ளவர்களாக கண்டறியப்பட்டனர். இவர்களுக்கு மற்றவர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவி இருந்தாலும், அனைத்திற்கும் மூலக் காரணமாக இருந்தது சீனாவின் ஊஹான் பகுதி தான்.

கேரளாவில் தான் இந்தியாவில் முதன் முதலில், கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நாட்டிலேயே மிகவும் குளிர்ச்சியானப் பகுதிகளுள் ஒன்றாக இருக்கும் கேரளாவில், இந்த வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் இருந்ததாக கூறப்பட்டன. இருப்பினும், கேரள அரசின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, அங்கு இந்த வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது.

ஆனால், மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தான் இந்த வைரஸ் தொற்றானது, அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலேக் குறிப்பிடப்பட்டுள்ள பத்து நகரங்களில், சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமானப் பயணங்கள் மூலமே, இந்த வைரஸ் பாதிப்பானது வெகு விரைவாகப் பரவியுள்ளது.

படிப்பவர்களுக்கு சற்று விநோதமாக இருக்கலாம். முதலில் சீனாவில் இருந்து திரும்பிய நபர்கள் கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர், தொடர்ந்து இந்தியாவின் பிறப் பகுதிகளுக்கும் சீனாவில் இருந்துப் பலரும் விமானங்களில் திரும்பி வந்தனர். அவர்களையும் நம் அரசாங்கம் வெற்றிகரமாகத் தனிமைப்படுத்தியது. ஆனால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், பிற மாநிலங்களுக்கு எளிதாகப் பயணம் செய்ய ஆரம்பித்தனர்.

அதாவது கேரளாவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, சென்னை உள்ளிட்ட வளர்ந்த நகரங்களுக்கு, வியாபாரம், குடும்பம், தொழில் உள்ளிட்டப் பல விஷயங்களுக்காக பயணங்களை மேற்கொண்டனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டப் பின்பு, கூட்டம் கூட்டமாக நடக்கவும் ஆரம்பித்தனர். அப்பொழுது, இதன் வேகம் மீண்டும் வேகமெடுத்தது.

ஆனால், ஊரடங்கு முழுமையாகவும் தீவிரமாகவும் அமல்படுத்தப்பட்டதும், இதன் வேகம் குறையாமல், தீயினைப் போல வேகமாகப் பரவியது. இதற்கு, பயணங்களும் அலட்சியுமே மூலக் காரணமாக உள்ளன. காற்றின் மூலம், நீரின் மூலம் பரவும் தன்மைக் கொண்ட இந்த வைரஸானது, தற்பொழுது அதிவேகமாகப் பரவி வருகின்றது.

இந்தியாவின் இயற்கைச் சூழ்நிலை, இந்த வைரஸ் பரவலுக்கு எதிராக இருந்தாலும், பொதுமக்களிடம் உள்ள அலட்சியம் காரணமாக இது வேகமாகப் பரவி வருகின்றது. சென்னை உட்படப் பல நகரங்களில், அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தாலும், தொடர்ந்து மக்களிடம் நிலவும் ஒருவித கண்மூடித்தனமான துணிச்சலே இவ்ளவு பரவுலுக்கும் மூலதனமாக மாறியுள்ளது.

HOT NEWS