நாளை ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? வைரலாகும் தகவல்கள்!

04 April 2020 அரசியல்
april5troll.jpg

ஏப்ரல் 5ம் தேதி அன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும் என, பல பாஜக ஆதரவாளர்களும், இந்துத்துவாவினைப் போற்றுபவர்களும், தங்கள் இஷ்டத்திற்கு புதிய தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அவைகளைச் சற்றுப் பார்ப்போம்.

வருகின்ற ஏப்ரல் 5ம் தேதி அன்று, வாமன துவாதசி வருகின்றது. அன்று இரவு செயற்கை விளக்குகளை அணைத்துவிட்டு, இயற்கையான அகல்விளக்குகளை ஏற்றுவதன் மூலம், வைரஸ் தொற்றினை அழிக்க இயலும் என புராணங்கள் கூறுகின்றனவாம். இதைத் தான், பிரதமரும் கூறுகின்றார் எனக் கூறுகின்றனர். அவ்வாறு விளக்கு ஏற்றுவதால், எதிர்மறை ஆற்றல் அழிந்து, நேர்மறை ஆற்றல் வளரும் எனவும் நம்புகின்றனர்.

பாடகி சின்மயியும் இது குறித்து நக்கலாக டிவிட் ஒன்றினைச் செய்துள்ளார்.

ஒரு சிலர் ஜோதிடத்திற்கான காரணத்தினைக் கூறுகின்றனர்.

நாட்டை ஆள்பவரின் ஜாதகம் நாட்டையும் வழிநடத்தும்! கோட்சாரப்படி விருச்சிக ராசியினருக்கு, 7 1/2 சனி முடிந்தது தற்போது ராசி அதிபதி செவ்வாய் உச்சம், தைரிய ஸ்தான அதிபதி சனி ஆட்சி, 7 ம் அதிபதி ஆட்சி பிறரின் கர்மாவை தீர்க்கும் சனியின் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த நம் ஆட்சியாளருக்கு கோட்சாரம் : கால புருஷ தத்துவத்தில் கர்மாவை குறிக்கும் 10 ம் வீட்டில் சனி பகவான் அறிவித்த (03-04-2020) நாள் : பூசம்

(ஜென்ம தாரை : பரிகாரம் செய்ய நன்மை -அனுஷம், பூரட்டாதி பூசம்), அறிவித்த நேரம் :காலை 9 மணி (சனி ஹோரை/ கடிகார நேரப்படி 9 - 10 மணி என்பது கர்மாவைக் குறிக்கும் 10 ம் பாவம்))

விளக்கேற்றும் (05-04-2020) நட்சத்திர நாள் : பூரம் ( சுக்கிரன்) (சேம தாரை : நல்வாழ்வு, உடல்நலம், காரிய வெற்றி - பரணி, பூரம், பூராடம்) விளக்கேற்றும் நேரம் : இரவு 9 மணி (சுக்கிர ஹோரை/ கடிகார நேரப்படி 9 - 10 மணி என்பது கர்மாவைக் குறிக்கும் 10 ம் பாவம்)கால அளவு : 9 நிமிடங்கள்

(9 கிரகங்கள்/ 21 நாள் முடிய இன்னும் 9 நாட்கள் உள்ளது) விளக்கேற்றும் முறை : நான்கு முனைகளில் விளக்கு (பூரம் நட்சத்திரத்தின் வடிவங்களில் ஒன்று : சதுரம் ) பூரத்தின் அதிபதி சுக்கிரனுக்கு குரு பார்வை உள்ள நாள் எண்கணிதம் 03-04-2020

0+3+0+4+2+0+2+0= 11, 1+1 = விதி எண் 2 (சந்திரன்-மனதைரியம் தரும்)

05-04-2020 = 0+5+0+4+2+0+2+0= 13, 1+3 = விதி எண் 4 (ராகு- விளக்கேற்றும் செயலின் பிரமாண்டம்) ஞாயிறு = ஆட்சியாளருக்கு பலமான நாள் பரிகாரம் பலித்து, இந்தியாவிற்கு விரைவில் நல்லது நடக்கும் என நம்புவோம்!

source:https://www.facebook.com/groups/841866822876568/?ref=bookmarks

HOT NEWS