எஸ் பேங்க் நிறுவனர் ரானா கபூரினை அமலாக்கத் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடைய வீட்டில் இருந்து, 2000 கோடி ரூபாய் முதலீடுத் தொடர்பான ஆவணங்கள், ஒப்பந்தப் பத்திரங்கள், விலை உயர்ந்த ஓவியங்கள் மற்றும் செயல்படாத ஷெல் கம்பெனிகளின் ஆவணங்களை, அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர்.
அவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், ப்ரியங்கா காந்தியிடம் இருந்து வாங்கப்பட்ட விலையுயர்ந்த ஓவியங்களும் அடங்கியுள்ளன. அந்த ஓவியங்களுள் ஒன்றின் விலையானது, இரண்டு கோடி ரூபாய் மதிப்புடையதாகும். அந்தப் பணத்தினை, ப்ரியங்கா காந்திக்கு ரானா கபூர் வழங்கியுள்ளார். அந்தப் பணத்தினைப் பெற்ற ப்ரியங்கா காந்தி, அதனை வைத்து, சிம்லாவில் காட்டேஜ் கட்டியுள்ளார்.
இதனைக் கண்டுபிடித்துள்ள அமலாக்கதுறையானது, தற்பொழுது பிரியங்கா காந்தியிடமும் இது குறித்து விசாரிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ப்ரியங்கா காந்திக்கு, இந்த ஓவியம் தொடர்பாக ரானா கபூர் எழுதியக் கடிதங்களையும், அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளதால், அவரிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் எனவும் கூறப்படுகின்றது.