WONDER WOMEN 1984 திரைவிமர்சனம்!

24 December 2020 சினிமா
wonderwomen84.jpg

WONDER WOMEN வெற்றியினைத் தொடர்ந்து, அதன் இரண்டாவது பாகமாக வெளியாகி இருக்கும் திரைப்படம் WONDER WOMEN 1984.

இந்தப் படமானது, பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில், தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. இந்தப் படத்திலும், WONDER WOMEN ஆக கால் காடோட் நடித்திருக்கின்றார். படத்தினை உலகம் முழுக்க, பல்வேறு மொழிகளில் வெளியிட்டு உள்ளனர். இந்த WONDER WOMEN படத்தின் பிரதானக் கதையே, ஆண்களால் செய்ய முடிகின்ற அனைத்தும், பெண்களாலும் முடியும் என்பது தான். அதனை மையப்படுத்தித் தான், இந்தப் படத்தில் பலவிதக் கதைகளை உருவாக்கியும், படமாக்கியும் வருகின்றனர்.

இந்தப் படமும், அந்தக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான். ஒரு கல்லில் இருக்கின்ற சக்தியினை எடுத்துக் கொள்ளும் வில்லனுக்கும், கதாநாயகி WONDER WOMENக்கும் இடையில் நடைபெறும் சண்டை தான், இந்த WONDER WOMEN 1984 கதை. குழந்தையாக இருக்கும் கால்காடோட் ஒரு போட்டியில் கலந்து கொள்கின்றார். அவர் கடுமையாக போராடி விளையாடிய பொழுதும், கடைசி நேரத்தில் அங்குள்ளவர்களால் அவர் வெற்றி பெற இயலாமல் போகின்றது. அங்கு ஆரம்பிக்கின்றது இந்தப் படத்தின் தொடக்கம்.

பின்னர், காலம் செல்லச் செல்ல அவர் அமெரிக்காவின் நேஷனல் மியூசியத்தில் வேலைக்குச் செல்கின்றார். அங்குள்ள ஒரு அரிய வகை கல்லானது காணாமல் போகின்றது. அந்தக் கல்லில், லத்தீன் மொழியில் குறிப்பு இருக்கும். அந்தக் கல்லானது, கேட்டதைக் கொடுக்கும் சக்தி படைத்தது. அந்தக் கல்லினைக் கொள்ளையடித்தது யார். அந்தக் கல்லின் சக்தி என்ன ஆனது, அந்தக் கல்லினை மீட்டாரா கால் காடோட். தீய சக்திகளை அழித்தாரா என, இப்படத்தின் திரைக்கதை செல்கின்றது.

இந்தப் படத்தில் சென்றப் பாகத்தினைப் போல, பெரிய சண்டைக் காட்சிகள் கிடையாது. ஆனால், சுவாரஸ்யமான சண்டைக் காட்சிகள் உண்டு. குழந்தைகளுடன் பார்த்து ரசிக்கும் அளவிற்கு இருந்தாலும், சென்றப் பாகத்தில் இருந்த அந்த ஒரு விறுவிறுப்பானது இப்படத்தில் இல்லை. படத்தின் மிகப் பெரிய பலமாக அமைந்துள்ள விஷயங்கள் என்னவென்றால், படத்தின் நடிகர் குழுவும், ஆடை வடிவமைப்பும் தான். படத்தின் கதையானது 1984ம் ஆண்டுகளில் நடைபெறக் கூடியது என்பதால், அதற்கேற்றாப் போல கச்சிதமாக உடைகளையும், கதாபாத்திரங்களையும் வடிவமைத்து உள்ளனர்.

படத்தின் கதாப்பாத்திற்கு ஏற்றாற் போல, அனைத்து நடிகர்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் தான், இந்தப் படத்தினை தூக்கி பிடிக்கின்றனர். படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளும் அருமையாகவே உள்ளது. படமே வெளியாகாமல் இந்த ஆண்டு முழுக்க முடிய உள்ளதால், இந்தப் படம் உலக மக்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் அளிக்கும் விஷயமாக இருக்கும் என்றால், ஆச்சர்யப்படுவதற்கில்லை.

HOT NEWS