பிளாக் ஹோல் என்று அழைக்கப்படக் கூடிய கருத்துளையின் முதல் உண்மையான, படத்தை வெளியிட்டுள்ளது நாசா.
இன்று, மாலை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், நாசா இந்த கருத்துளையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்தக் கருத்துளையானது, தன்னை சுற்றியுள்ள கிரகங்கள், சூரியன் போன்ற நட்சத்திரங்கள் மற்றும் பல வான் பொருட்களையும், ஒளியையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும் சக்தி படைத்தது.
இந்த கருந்துளை பூமியில் இருந்து சுமார் 55 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த கருந்துளை சுமார், 6.5 பில்லியன் சூரியனின் நிறை ஒத்ததாக கருத்தப்படுகிறது. மேலும், வெளியான புகைப்படமானது, கருத்துளையின் நிழல் என்றும், உண்மையானக் கருத்துளையை யாராலும் நெருங்க முடியாது என்றும் கூறியுள்ளனர். தொடர்ந்து நாங்கள் இதைக் கண்காணித்து வருவதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.