உலகின் பயங்கரமான இடங்கள்! இங்க யாரும் போகாதீங்க!

07 July 2019 தொழில்நுட்பம்
horror.jpg

உலகிலேயே மிக மோசமான இடங்களாகப் பல இடங்கள் இருந்தாலும், ஒரு சில இடங்களுக்கு மனிதர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட இடங்கள் பார்ப்பதற்கு மிக அமைதியாக இருந்தாலும், அதன் பின்புலம் தெரிந்தால் அனைவருமே, பயப்படத்தான் செய்வோம்.

இந்த இடங்களில் பல அமானுஷ்யமான விஷயங்கள் நடந்துள்ளன. பலரும் காரணம் இல்லாமல், அல்லது எவ்விதத் தடையமும் இல்லாமல், இறந்துள்ளனர். அப்படிப்பட்ட இடங்களைப் பற்றி, சற்றுப் பார்ப்போம்.

பர்க் உல்ப்ஸெக், உல்ப்ஸெக், ஜெர்மனி (burg wolfsegg, wolfsegg, Germany)

இந்த கோட்டை ஜெர்மனியில் உள்ள உல்ப்ஸெக், என்ற பகுதியில் அமைந்துள்ளது. பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கும் இந்தக் கோட்டை, 800 ஆண்டுகள் பழமையானது. இதில் கிளாரா வான் ஹெல்பென்ஸ்டெயின், தன்னுடைய பொறாமை கொண்ட கணவனால், படுகொலை செய்யப்பட்டாராம். அன்று முதல், இந்த வீட்டிற்குள் யாரும் செல்வதில்லை. இன்றும், யாராவது இந்த வீட்டிற்குள் சென்றால், வெள்ள நிறத்தில் பெண் உருவம் நம்மைக் கடந்து செல்கிறது என, அப்பகுதி மக்கள் அந்த கோட்டைக்கு அருகில் கூட செல்வதில்லை.

காசா லோமோ, டொரான்டோ, கனடா (casa loma toronto, canada)

1914ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த மாளிகை, கனடா நாட்டில் அமைந்துள்ளது. இதனை பழைய கத்தோலிக்க முறையில், வடிவமைத்துள்ளனர். பார்ப்பதற்கு மிக அழகாக காட்சித் தரும் இந்த மாளிகை, பல ரகசிய வழிகளையும், பாதுகாப்பு அறைகையும் கொண்டது. இந்த மாளிகையைப் பல பேய்களும், அமானுஷ்ய சக்திகளும் பல ஆண்டுகளாக, பாதுகாப்பதாக மக்கள் நம்புகின்றனர். இதன் காரணமாக, இதனை ஹாலோவென் தினத்தினை குறிக்கும் விதமாக, மியூசியமாக மாற்றிவிட்டனர்.

டிரிஸ்கில் ஹோட்டல், ஆஸ்டின், டெக்ஸாஸ் (driskill hotel, austin, texas)

டெக்ஸாஸ் நகரில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் மிகவும் பிரபலமானது. இந்த ஹோட்டலில் 1960-70 காலங்களில், சினிமா பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் தங்கியுள்ளனர். இந்த ஹோட்டலில் இரவு நேரங்களில் திடீர் சப்தங்களும், விசித்திர உருவங்களும் கடந்து செல்வதாக, அங்கு வேலை செய்தவர்கள் கூறியுள்ளனர்.

ஏக்கர்சஸ் பெஸ்ட்னிங், நார்வே (akershus festning, norway)

ஆஸ்லோ நகரைப் பாதுகாக்க, இந்தக் கோட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பின் இதில் நடைபெற்ற மர்ம மரணங்களால், இதனைக் கைவிட்டு விட்டனர். அந்தக கோட்டையில், மோசமான வேட்டை நாய் வாசலிலேயே இன்றும் இருப்பதாகவும், முகமில்லாத கொடூரமான பெண் அந்த வீட்டில் இருப்பதாகவும், அதனை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

ஹோய் பாசியு-ரோமேனியா (hoia baciu forest, romania)

ரோமேனியா நாட்டின், குலூஞ் நபூக்கா நகரில் உள்ள, ஹோய் பாசியு காடு தான் இருப்பதிலேயே மிக மோசமான ஒன்றாக அனைத்து பேய் ஆராய்ச்சியாளர்களாலும் கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் விசித்திரமான சப்தங்களும், திடீரென்று பின்னால் யாரோ நிற்பது போன்ற உணர்வும் ஏற்படுவதாக கூறுகின்றனர். மேலும், இப்பகுதியில் புகைப்படம் எடுத்தால், அடையாளம் தெரியாத, புரிந்து கொள்ள இயலாத முகங்கள் தெரிவதாக கூறியுள்ளனர்.

எது எப்படியோ, இந்த மாதிரி இடங்களுக்கு நாம் செல்லாமல் இருந்தாலே சரி. வாழ்க்கைல எவ்வளவு இருக்குப் பாக்குறதுக்கு, இதில எதுக்கு நாம இந்த மாதிரி இடங்களுக்கு போகணும்!

HOT NEWS