இந்தியாவிற்கு 7,500 கோடி அவசர நிதி! உலக வங்கி அறிவிப்பு!

03 April 2020 அரசியல்
worldbank.jpg

இந்தியாவில் வேகமாகப் பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக, 2000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 53 பேர் மரணமடைந்து உள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை, கடுமையாகப் பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் இருப்பவர்களுக்கு, மத்திய அரசு நிவாரண உதவியினை அறிவித்துள்ள போதிலும், அது போதிய அளவில் இல்லை என, பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவிற்கு நிதி திரட்டி வருகின்றர் பாரதப் பிரதமர் மோடி. நேற்று (02-04-2020) அன்று நடைபெற்ற, உலக வங்கிக் கூட்டத்தில், இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்ற 25 நாடுகளுக்கு நிதியுதவி அளிக்க, உலக வங்கி ஒப்புக் கொண்டு உள்ளது.

அடுத்த 15 மாதங்களுக்கு மொத்தமாக, 169 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலக வங்கி ஒதுக்கி உள்ளது. அதில், தற்பொழுது முதற்கட்டமாக, பண உதவியினை அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு, 1 பில்லியன் அமெரிக்க டாலர்களும், பாகிஸ்தானிற்கு 200 மில்லியன் அமெரிக்க டாலர்களும், ஆப்கானிஸ்தானிற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களும், மாலத்தீவிற்கு 7.3 மில்லியன் அமெரிக்க டாலர்களும், இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டாலர்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம், தற்போதைய மருத்துவ உதவியானது அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில், இந்த நிதியினைக் கொண்டு தான் மருத்துவ உதவிகளை செய்யப்பட உள்ளன. இந்தியா போன்ற நாடுகளில், சிறு, குறு வணீக நிறுவனங்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த நிதியானது உதவிகரமாக இருக்கும் என, உலக வங்கித் தெரிவித்துள்ளது.

HOT NEWS