ஊரடங்கால் முன்னேறும் உலக சுகாதாரம்! எப்படி தெரியுமா?

30 March 2020 தொழில்நுட்பம்
todayenvironment.jpg

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக, பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்து உள்ளன. இதனால், பொதுமக்கள் பெரும்பாலும் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளன. இதனால், வாகனங்கள் பயன்பாடானது பெருமளவு குறைந்துள்ளது.

அத்தியாவசிய வாகனங்களான, ஆம்புலன்ஸ், மருத்துவ உபகரணங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், காய்கறி வாகனங்கள், அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், இராணுவ வாகனங்களைத் தவிர்த்து, மற்ற வாகனங்களின் எண்ணிக்கையானது பல மடங்கு குறைக்கப்பட்டு உள்ளது.

இதனால், டெல்லியில் நிலவி வந்த காற்று மாசின் அளவானது, கணிசமாகக் குறைந்து வருகின்றது. அதுமட்டுமின்றி, நாம் வாழும் புவியினைப் பாதுகாக்கும் ஓசோன் படலமானது, குணமடைந்து வருகின்றது என்றத் தகவல் வெளியாகி உள்ளது. ஓசோனில் ஓட்டை விழுந்து வந்த நிலையில், அதன் மூலம் புற ஊதாக்கதிர்கள் ஊடுறுவி வந்தன.

இந்நிலையில், தற்பொழுது ஓசோன் படலம் மீண்டு வருகின்றது. அமெரிக்கா, சீனா, இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, ஐக்கிய அரபு நாடுகள், ரஷ்யா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தங்களுடைய மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்க உத்தரவிட்டுள்ளன. இதனால், அந்த நாடுகளில் நிலவி வந்த காற்று மாசு, ஒலி மாசு முதலியவைகளின் அளவானது படிப்படியாகக் குறைந்து வருகின்றன.

இதனால், புவியானது தன்னை விரைவில் புதுப்பித்துக் கொள்ளும் எனவும், இயற்கைப் பேரிடர்கள் எதுவும் ஏற்படாது எனவும் கூறப்படுகின்றது. மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள காரணத்தால், வன விலங்குகள், பறவைகள் முதலியவை சாலைகளிலும், வீதிகளும் உற்சாகமாக உலா வருகின்றன.

HOT NEWS