எதில் முன்னேறுகிறோமோ இல்லையோ, வறுமையில் அதிவிரைவாக முன்னேறி வருகிறது இந்தியா. உலகில் வறுமைகளைப் பற்றியும், சுகாதாரம் பற்றியும் கணக்கெடுப்பு நடத்தும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃப் என்ற நிறுவனம், தற்பொழுது அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், உலகில் உள்ள 119 நாடுகளில், குழந்தைகளின் ஊட்டச் சத்து மற்றும் வறுமை குறித்த, ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அந்த ஆராய்ச்சியின் படி, இந்தியா 103வது இடத்திற்கு சென்றுள்ளது. 2017ம் ஆண்டு 100வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில், அண்டை நாடான சீனா 25வது இடத்திலும், நேபால் 72வது இடத்திலும், மியான்மர் 68வது இடத்திலும், இலங்கை 67வது இடத்திலும், வங்கதேசம் 86வது இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் இதில் இந்தியாவைத் தொடர்ந்து, 106வது இடத்தில் உள்ளது.
இதில், 0 வாங்கும் நாடே சிறந்த நாடாகும். 100 மதிப்பெண்களை வாங்கும் நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ள நாடாகும். இந்த ஆராய்ச்சியை 2018ம் ஆண்டு நடத்தியுள்ளது. இதன் அடிப்படையில், இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது அந்த நிறுவனம்.
www.welthungerhilfe.org/news/publications/detail/global-hunger-index-2018-poster/
www.financialexpress.com/economy/india-ranks-103-on-global-hunger-index/1350352/