இந்தியாவினை நினைத்து கவலைப்படும் WHO! உலகம் மோசமடைந்து வருகின்றது!

10 June 2020 அரசியல்
tedros.jpg

இந்தியாவில் தற்பொழுது ஊரடங்கு தளர்த்தப்படுவதால், கொரோனாவைரஸ் பரவுவதன் வேகம் அதிகரிக்கும் என, உலக சுகாதார மையம் கவலைத் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும், சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது தற்பொழுது அதிவேகத்தில் பரவி வருகின்றது. தற்பொழுது வரை 4,10,000 பேர் இந்த வைரஸால் மரணமடைந்து உள்ளனர். 70 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் குறித்து, தினமும் புதியத் தகவல்களை உலகு சுகாதார மையம் அறிவித்து வருகின்றது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தியாவில் தற்பொழுது ஊரடங்கு உத்தரவானது படிப்படியாகத் தளர்வு செய்யப்பட்டு வருகின்றது. இதனால், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, உலக சுகாதார மைய இயக்குநர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். மேலும், அவர் பேசுகையில், உலகமே தற்பொழுது மோசமானத் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாகவும், நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அமெரிக்காவில் தான், இந்த வைரஸ் பாதிப்பு அதிகளவில் இருப்பதாகவும், இந்த சூழ்நிலையில் அங்கு நடைபெற்று வரும் உள்நாட்டுப் போராட்டங்களால் மேலும் இந்த வைரஸ் பரவும் வேகம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.

உலகில் பரவுகின்ற கொரோனா வைரஸில், அறிகுறி இல்லாமல் பரவுகின்ற வைரஸானது மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். உலக நாடுகள், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், ஊரடங்கினை யாரும் தளர்த்த வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

HOT NEWS