எங்கள் ஆய்வுக் கூடத்தில் இருந்து பரவவில்லை! ஊஹான் ஆய்வு மையம் அறிவிப்பு!

26 May 2020 அரசியல்
coronavirusdelhi.jpg

எங்களுடைய வைரஸ் ஆய்வு செய்யும் கூடத்தில் இருந்து, கொரோனா வைரஸ் பரவ ஆரம்பிக்கவில்லை என, அந்த ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து, கடந்த டிசம்பர் மாத இறுதியில், கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அன்று தொடங்கி தற்பொழுது வரை, உலகம் முழுவதும் இந்த வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதன் காரணமாக, மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்து உள்ளனர். 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வைரஸால், அமெரிக்காவில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இதனால், இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, அமெரிக்க அதிபரும் துணை அதிபரும், இந்த வைரஸ் சீனாவில் இருந்து உருவாக்கப்பட்டது என தொடர்ந்து, புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

உலக நாடுகள் பலவும், இவ்வளவு பெரிய பேரழிவிற்கு சீனா தான் முக்கியக் காரணம் என்றுக் கூறி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஊஹான் ஆய்வு மையம் தற்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த வைரஸ் பற்றி எங்களுக்குத் தெரியாது. இதை நாங்கள் வைத்திருக்கவில்லை.

மேலும், இந்த வைரஸ் எங்களிடம் இல்லை. இதனைத் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. எவ்வித ஆதாரமும் அற்ற, குற்றச்சாட்டுக்களை கூறுவதை முதலில் நிறுத்துக் கொள்ளுங்கள் என அது அறிவித்துள்ளது.

HOT NEWS