இந்தியாவினைத் தொடர்ந்து நேபாளம் சென்றார் ஜிங்பிங்!

13 October 2019 அரசியல்
xijingping.jpg

இரண்டு நாள் பயணமாக, இந்தியா வந்திருந்த சீன அதிபர் ஜி ஜிங்பிங், நேற்று மதியம், இந்தியாவில் இருந்து புறப்பட்டு, நேபாளத்திற்கு சென்றார்.

இரண்டாவது முறைசாறா உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, இந்தியாவிற்கு வெள்ளிக்கிழமை வந்திருந்தார் சீன அதிபர் ஜி ஜிங்பிங். அவரை, இந்தியப் பிரதமர் மோடி, மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர், நேற்று நடைபெற்ற விருந்தில், சீன அதிபர் ஜிங்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், கலந்து கொண்டனர்.

மதியம், சீன அதிபர், நேபாளம் செல்வதற்காக, இந்திய பிரதமரிடம் விடைபெற்றார். இந்தியாவில் இருந்து, நேபாளம் தலைநகர் காட்மண்ட்டிற்கு, மாலையில் சென்று சேர்ந்தார் ஜிங். அங்கு அவரை, நேபாள குடியரசுத் தலைவர் தேவி பந்தாரி, பிரதமர் கேபி ஷர்மா ஓலி, துணை குடியரசுத் தலைவர் நந்தா பகதூர் ஆகியோர், விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றனர்.

கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பின்னர், சீன அதிபர் ஒருவர், நேபாள நாட்டிற்குப் பயணித்துள்ளார். அதிபர் ஜிங்பிங்கினை கௌரவிக்கும் பொருட்டு, இன்று நேபாளத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரு நாட்டுத் தலைவர்களும், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS