கங்கனா ரனாவத்திற்கு Y பிளஸ் பாதுகாப்பு! அமித் ஷாவிற்கு நன்றி தெரிவித்த கங்கனா!

08 September 2020 சினிமா
kanganaranaut.jpg

தமிழிலில் தற்பொழுது குயின் படத்தில் நடித்து வருகின்றார் கங்கனா ரனாவத். அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பினை, மத்திய ரிசர்வ் படை போலீசார் வழங்கி உள்ளனர். இதனால், அவருக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம் தொடர்பாக, தினமும் பல அடுக்கடுக்கான புகார்களை, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்து வந்தார். அவர் பாலிவுட்டில் நெப்போடிசம் இருப்பதாகவும், பாலிவுட்டில் அதிகளவில் போதைப் பொருட்கள் புழங்குவதாகவும் தெரிவித்து வந்தார். அவருடையப் பேச்சிற்கு இமாச்சலப் பிரதேச மாநிலத்தினைச் சேர்ந்த பாஜகவைச் சேர்ந்த ராம் என்பவர், மராட்டிய அரசு கங்கனாவிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றுக் கூறினார்.

இமாச்சலப் பிரதேசத்தினைப் பற்றி இழிவாகப் பேசியுள்ள கங்கனா, சினிமாவில் வருகின்ற மாஃபியாவினை விட, மும்பை போலீசாரைப் பார்த்துத் தான் பயப்படுவதாகவும் கூறனார். இதனால், சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனிடையே, மத்திய அரசுக்கு கங்கனாவின் தந்தையும், சகோதரியும் பாதுகாப்பு வழங்கும் படி, வேண்டுகோள் விடுத்தனர். அதே போல், இமாச்சல அரசும் வேண்டுகோள் விடுத்தது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது கங்கனாவிற்கு ஒ பிளஸ் பாதுகாப்பினை வழங்க, மத்திய அரசு முன் வந்துள்ளது. அதற்காக, மத்திய ரிசர்வ் படையினைச் சேர்ந்த துப்பாக்கி ஏந்திய பத்து கமாண்டோக்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உள்ளனர். இதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு, கங்கனா ரனாவத் நன்றி தெரிவித்து உள்ளார்.

HOT NEWS