சென்னையில் நடிகை யாஷிகா ஆனந்த் கார் இடித்து, இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நடிகை யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம், தமிழ்நாட்டில் பிரபலமடைந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு 2 மணியளவில், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹாரிங்டன் சாலையில், கார் செல்லும் பொழுது, அங்கிருந்த இளைஞர் பரத் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான காரில் பயணம் செய்தவர்கள் மது அருந்தியிருந்ததாகவும், மேலும், விபத்தினை அடுத்து, அந்த சொகுசுக் காரினை விட்டுவிட்டு, வேறொரு காரில் அவர்கள் சென்றதாகவும் கூறுகின்றனர்.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், டெலிவரி பாயாக வேலை செய்யும் பரத் என்பவர் மீது மட்டுமின்றி, அங்கிருந்த மற்றொருவர் மீதும் அந்தக் கார் இடித்துள்ளது. மேலும், அங்கிருந்த கடையினையும் சேதப்படுத்தியதாகவும் கூறுகின்றனர். அந்த காரில், நடிகை யாஷிகா ஆனந்த் இருந்ததாகவும் கூறுகின்றனர்.
இது பற்றி, விசாரித்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். படுகாயம் அடைந்த பரத், அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.