நடிகை யாஷிகா ஆனந்தினைப் பற்றி தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்குப் பின், அம்மணி பட்டித் தொட்டி எங்கும் மிகவும் பிரபலம் அடைந்தார்.
மிகக் குறைந்த வயதிலேயே, சினிமாவில் பலராலும் அறியப்பட்டவர் யாஷிகா ஆனந்த். ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்டப் படங்களில் நடித்தவர். அவர் தற்பொழுது ஊரடங்கின் காரணமாக, வீட்டிலேயே இருக்கின்றார். இந்நிலையில், அவர் தற்பொழுது புகைப்படம் ஒன்றினை அதிரடியாக வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் ஜிம்மிற்கு சென்று, உடல் எடையினை வெகுவாகக் குறைத்துள்ளார். இதனால், அம்மணி முன்பிருந்ததை விட, சற்று மெலிந்து சிக்கென உள்ளார். தொடர்ந்து மூன்று மாதமாக அவர் ஜிம்மில் உழைத்து, தற்பொழுது உடல் எடையினைக் குறைத்துள்ளார். இந்தப் புகைப்படம், தற்பொழுது இணையத்தில் வைரலாகி உள்ளது.