நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா வெற்றி! ஆட்சியைக் கைப்பற்றினார்!

29 July 2019 அரசியல்
yeddyurappa.jpg

இன்று கர்நாடாகவில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் எடியூரப்பாவின் பாஜக கட்சி வெற்றிப் பெற்றார். இதன் காரணமாக, பாஜகவின் ஆட்சியில் கர்நாடகா உள்ளது உறுதியானது.

சென்ற ஆண்டு 2018ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸின் ஆதரவுடன், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்தது. குமாரசாமி முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததால், கர்நாடகாவில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உட்பட 17 பேர் ஆட்சிக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தனர். திடீரென்று, பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் பரவியதை அடுத்து, அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.

இதனை அடுத்து கர்நாடகாவில் உள்ள ஆளுநரை எடியூரப்பா, தான் பதவியேற்க உரிமைக் கோரினார். இதனை அடுத்து ஆளுநரின் அனுமதியுடன், எடியூரப்பா பதவியேற்றார். மேலும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் கூறினார்.

இந்நிலையில் இன்று காலையில், நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், 106 வாக்குகள் பெற்று, எடியூரப்பாவின் பாஜக கட்சியினர் வெற்றிப் பெற்றனர். இதனை அடுத்து சபாநாயகர் ரமேஷ்குமார் தன்னுடையப் பதவியை ராஜினாமா செய்தார்.

HOT NEWS