ஏமன் தாக்குதல்! 100 பேர் பரிதாபமாக பலி!

20 January 2020 அரசியல்
missiletest.jpg

ஏமன் நாட்டில், சவுதி அரேபியாவின் கூட்டுப் படைகளுக்கும், ஈரான் ஆதரவு இயக்கமான ஹூதி போராட்டக்காரர்களுக்கும் இடையில், தற்பொழுது சண்டை மூண்டுள்ளது.

இதனிடையே, நேற்று ஏமன் தலைநகர் சனாவிற்கு அருகில் அமைந்துள்ள, மாரீப் மாகாணத்தில் உள்ள மசூதியில், இராணுவ வீரர்கள் உட்பட பலரும் மாலைத் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் தொழுகை நடத்தும் நேரம் பார்த்து, ஹூதி போராட்டக்காரர்கள் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலை எதிர்ப்பார்க்காத இராணுவ வீரர்களும், பொது மக்களும் இந்த தாக்குதலால் காயமடைந்தனர். ஹூதி அமைப்பினர் நடத்திய இந்த தாக்குதலில் சுமார் 100 பேர் மரணமடைந்ததாகவும், 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் இராணுவத்தினைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை, எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

HOT NEWS