லவ் ஜிகாத் எதிராக கடுமையான சட்டம்! உபி முதல்வர் யோகி அறிவிப்பு!

01 November 2020 அரசியல்
yogiadityanath1231.jpg

விரைவில், லவ் ஜிகாத் செயலுக்கு எதிராக, கடுமையான சட்டம் உருவாக்கப்படும் என, உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.

தற்பொழுது லக்னோவிற்கு அருகில் உள்ள ஜூவான்பூர் என்றத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தன்னுடைய கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்ற யோகி, மேடையில் பேசினார். அவர் பேசுகையில், லவ் ஜிகாத் செயல்களுக்கு எதிராக விரைவில் கடுமையான சட்டம் இயற்றப்படும் என்றுக் கூறியுள்ளார். லவ் ஜிகாத் என்பது, திருமணத்தின் மூலம், பெண்ணை ஆணின் மதத்திற்கு மாற்றுவது ஆகும்.

திருமணத்திற்காக யாரும் மதம் மாறத் தேவையில்லை என, ஏற்கனவே நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. அதாவது, பெண்ணைக் காதலிக்கும் நபர்கள், பின்னர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்கின்றனர். அவ்வாறு திருமணம் செய்து கொள்ளும் பொழுது, அந்தப் பெண் திருமணம் செய்யும் ஆணின் மதத்திற்கு மாறக் கட்டாயப்படுத்தப்படுகின்றார். இவ்வாறு தொடர்ந்து செய்யப்பட்டு வருவதை, ஏற்கனவே போலீசார் கண்டுபிடித்து விட்டனர். இதற்கு லவ் ஜிகாத் எனவும் பெயர் வைத்து உள்ளனர்.

இதில், அதிகளவில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பேசிய யோகி, இந்து பெண்களைப் பாதுகாக்கவும், லவ் ஜிகாத்திற்கு எதிராகவும் விரைவில் கடுமையான சட்டம் இயற்றப்படும். பெண்கள், சகோதரிகள் மற்றும் குழந்தைகளின் அடையாளம், பாரம்பரியத்தினை குலைக்கும் வகையில் நடப்பவர்களுக்கு கட்டாயம் தண்டனை வழங்கப்படும் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS