கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு மீண்டும் கொரோனா? தடுப்பூசி பயன்படுமா?

26 August 2020 அரசியல்
coronasymptoms.jpg

கொரோனா வைரஸில் இருந்து மீண்டவருக்கு, தற்பொழுது மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது.

சீனாவின் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது பரவி வருகின்றது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், பல நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், ஹாங்காங் நகரில் தற்பொழுது புதிய விபரீத விஷயத்தினை, ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். கடந்த மார்ச் மாதம் 33 வயதுடைய இளைஞருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் குணமாகி வீடு திரும்பினார். சரியாக 142 நாட்கள் கழித்து, அவருக்கு அறிகுறி இல்லாத கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

அவரை ஹாங்காங் பல்கலைக் கழக மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்துள்ளனர். வெறும் 142 நாட்களில், எப்படி அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டது என, விஞ்ஞானிகள் குழம்பிப் போய் உள்ளனர். கொரோனா மருந்து கண்டுபிடித்தாலும், தற்பொழுது பிரச்சனை முடியுமா என்றக் கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா சரியான ஒருவருக்கு கொரோனா ஏற்படுகின்றது என்றால், நிச்சயம் கொரோனா தடுப்பு மருந்து பயன்படுத்திய ஒருவருக்கு, மீண்டும் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். இதற்கானப் பதிலானது, கொரோனா மருந்தில் தான் உள்ளது.

HOT NEWS