கரூரில் குழந்தைகள் ஆபாசப பட விவகாரம் தொடர்பாக இளைஞர் கைது!

31 January 2020 அரசியல்
child12.jpg

கரூர் மாவட்டத்தில், குழந்தைகள் ஆபாசப் படத்தினை ஷேர் செய்தவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, தமிழக காவல்துறை சிறார் ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள் மீதும், அதனை சேர் செய்பவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து இருந்தது. இந்நிலையில், தற்பொழுது வரை பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

மேலும், பலரை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது கரூரில் உள்ள சலூன் கடையில் வேலை செய்து வந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தினைச் சேர்ந்தவர் நியாஸ் அலி. அவர் கரூரில் உள்ள ஒரு சலூன் கடையில், மாத சம்பளத்திற்கு வேலை செய்து வந்துள்ளார்.

அவர் குழந்தைகள் ஆபாசப் படத்தினை ஷேர் செய்து வந்ததாக, சென்னையில் உள்ள குற்றப்பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, கரூர் மாவட்டப் போலீசார் அலியிடம் இருந்த செல்போனை வாங்கி விசாரணை செய்து வந்தனர். பின்னர், அதனை ஆய்வு செய்து பார்க்கையில், கடந்த ஒண்றரை வருடமாக குழந்தைகள் ஆபாசப் படத்தினை அவர் தரவிறக்கம் செய்வதும், பின்னர் அதனை வாட்ஸ் ஆப் குழுக்கலில் ஷேர் செய்வதுமாக இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நியாஸ் அலியைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் மீது, போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்திருந்ததை நீதிமன்றத்தில் காட்டினர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பின்னர், அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

குழந்தைகள் ஆபாசப் பட விவகாரம் தொடர்பாக, தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றப் பிரிவு ஏடிஜிபியான டாக்டர் ரவி ஐபிஎஸ், ஏற்கனவே எச்சரித்து இருந்தார். தற்பொழுது, அவர் கூறியபடியே போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS