பிரதமரை இளைஞர்கள் கம்பால் அடிப்பார்கள்! ராகுல் பேச்சிற்கு கடும் கண்டனம்!

08 February 2020 அரசியல்
rahulgandhidelhi.jpg

நாட்டில் உள்ள பிரதமரை, இந்திய இளைஞர்கள் கம்பால் அடிப்பார்கள் என, காங்கிரஸ் கட்சி தலைவர்களுள் ஒருவரான ராகுல் காந்தி பேசினார். அவருடைய பேச்சால், நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், ராகுல் காந்தி பேசினார். அவர் பேசும் பொழுது, தற்பொழுது வரை, பிரதமர் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மையைப் பற்றி வாய் திறக்கவே இல்லை. நாட்டில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இப்படியே சென்றால், அடுத்த ஆறு மாதங்களில், இளைஞர்கள் கம்பால் பிரதமரை அடிப்பார்கள் எனக் கூறினார்.

அதற்கு பாஜகவினர் கடுமையான அமளியில் ஈடுபட்டனர். பாஜக உறுப்பினர்கள் ஹர்ஸவர்தன் உள்ளிட்டோர் இப்பேச்சிற்கு, கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, நாடாளுமன்ற அவையானது, மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் ஒரு மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. அப்பொழுதும் அமளித் தொடர்ந்ததால், நாடாளுமன்றம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 2 மணிக்கு அவைக் கூடியது. திமுக எம்பி ஆ ராசா அவைக்கு தலைமை தாங்கினார். அப்பொழுது பேசிய அவர், சபையில் நடைபெற்றது விரும்பத்தகாத செயல். எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினரை, தாக்குவது காங்கிரஸ் உறுப்பினர்கள் செய்வது வருந்தத்தக்கது. இங்கு பேசியது சரியா, இல்லையா என, சபாநாயகரே கூற வேண்டும் என்றார். இதற்கு, காங்கிரஸ் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, நாள் முழுவதும், நாடாளுமன்றத்தினை ஆ ராசா ஒத்திவைத்தார்.

HOT NEWS