இப்பொழுது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், டாஸ்மாக், ஒயின் ஷாப் என பலவும் மூடப்பட்டு உள்ளன. இதனால், குடிமகன்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
பலர் வார்னிஸ்களை குடித்து மரணமடைந்து உள்ளனர். ஒரு சிலர் பினாயில், மெத்தனால் உள்ளிட்டவைகளைக் குடித்து மரணமடைந்து உள்ளனர். இந்நிலையில், ஒரு சிலர் கள்ளச் சாராயம் தயாரிக்கவும் ஆரம்பித்து விட்டனர். இதனால், போலீசார் ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். போசீசாரிடம் மாட்டியவர்கள், யூடியூப்பில் பார்த்து, சாராயம் தயாரித்ததாக கூறியுள்ளனர்.
இது குறித்து யூடிப்பில் ஆய்வு செய்தால், அதிர்ச்சியளிக்கும் விஷயங்கள் இருப்பது உறுதியாகி உள்ளது. யூடிப்பில் சென்று வீட்டில் என்று டைப் செய்தாலே, சாராயம் காய்ச்சுவது எப்படி என்று தான் வருகின்றது. சரி, என்ன தான் இருக்கின்றது என்றால், வீட்டிலேயே எப்படி சாராயம் காய்ச்சுவது, வீட்டிலேயே ஒயின் தயாரிப்பது என பல வீடியோக்கள் உள்ளன.
இதனைப் பல லட்சம் பேர் பார்த்து உள்ளனர். தமிழக அரசு குற்றம் செய்தவர்களை, உடனடியாக கண்டிக்கின்றது என்ற நிலையில், யூடிப்பில் இம்மாதிரியான வீடியோக்கள் இருப்பதால், பொதுமக்களில் பலரும் இதனை முயற்சிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, காவல்துறை தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில் மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சாமல், பொதுமக்களைத் தடுக்கலாம்.