விஜய் சேதுபதி படத்தில், முதன் முறையாக யுவன் சங்கர் ராஜாவும், இசைஞானி இளையராஜாவும் இணைய உள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பனை, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படத்தினை, யுவன் சங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது. யுவன் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். இதனை சீனு ராமசாமி இயக்க உள்ளார். மற்ற கலைஞர்களின் பெயர்கள் வெளியிடப்படாத நிலையில், இந்தப் படத்தின் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அதில், யுவன் சங்கர் ராஜா தன்னுடைய தந்தையும், இசைஞானியுமான இளையராஜாவுடன் இணைந்து, இப்படத்தில் இசையமைக்க உள்ளார். இதனை தற்பொழுது விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மட்டுமின்றி, யுவனின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
எப்பொழுதும், யாருடனும் கைக் கோர்க்காத இளையராஜா, தற்பொழுது தன்னுடைய சொந்த மகனுடன் இணைந்துப் பணிபுரிய உள்ளதால், படத்தின் பாடல்கள் எவ்விதமாக இருக்கும் என்ற, தீவிர ஆவலில் உள்ளனர்.