சோமட்டோவிற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு வலுக்கிறது!

02 July 2019 அரசியல்
zomato1.jpg

சோமட்டோ உணவினை இஸ்லாமியர் டெலிவரி செய்ததை எதிர்த்து, ஆர்டரை கேன்ஷல் செய்தது, குறித்த விவாதம் இன்னும் ஓயவில்லை. அதற்குள் சோமட்டோவிற்கு, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துள்ளது.

ஜம்பல்பூரைச் சேர்ந்தவர் அமித் சுக்லா. கடந்த ஆடி அம்மாவாசை அன்று, சொமட்டோ ஆஃப்பினை பயன்படுத்தி, உணவினை ஆர்டர் செய்துள்ளார். அதில் டெலிவரி செய்பவரின் பெயரைக் காட்டியுள்ளது. அதில் டெலிவரி செய்யும் நபரின் பெயர் ஃபயஸ் எனக் காட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சொமட்டோவின் சேவை மையத்தை அழைத்து, டெலிவிரி நபரை மாற்றக் கூறினார். ஆனால், சொமட்ட நிறுவனம் மாற்ற முடியாது என்றும், உணவிற்கு மதம் கிடையாது, உணவே மதம் எனக் கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆர்டரை கேன்சல் செய்வதாகவும், பணத்தைத் திரும்பித் தரும் படியும் கூறியுள்ளார். ஆனால், திரும்பித் தர முடியாது என சொமட்டோ நிறுவனம் கையை விரித்துள்ளது. இதனை எதிர்ப்பார்க்காத அமித் சுக்லா, தன்னுடைய எதிர்ப்பினை #BoycottZomato என்ற டேக் மூலம், டிவிட்டரில் தெரிவித்தார். இது தற்பொழுது வைரலாகி உள்ளது.

HOT NEWS