சைபீரியாவினை சாம்பலாக்கும் ஜாம்பி தீ! உருகும் பனிப்பாறைகள்!

29 May 2020 அரசியல்
firefighter.jpg

சைபீரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் காரணமாக, அங்குள்ள பனிப்பாறைகள் உருக ஆரம்பித்துள்ளன.

உலகம் முழுவதும், கொரோனா வைரஸானது அதிகளவில் பரவி உள்ளது. இதனால், மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சைபீரியா மற்றும் அலாஸ்கா உள்ளிட்டப் பகுதிகளில் காட்டுத் தீயானது மளமளவென பரவி வருகின்றது.

ஜாம்பீ தீ அல்லது ஹோல்ட்ஓவர் தீ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தீயால், பல லட்சம் மரங்கள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. சைபீரியாவின் அதிகபட்ச வெப்பநிலையே 32 டிகிரி பேரன்ஹீட் தான். ஆனால், அங்கு தற்பொழுது மொத்தமாக 78 டிகிரி பேரன்ஹீட்டாக, அதன் வெப்பநிலை உயர்ந்துள்ளது.

மிகக் குறைந்தக் காலக்கட்டத்தில், இவ்வளவு வெப்பம் உயர்ந்துள்ளதற்கு, முக்கியக் காரணமாக இருப்பது அங்கு பரவியுள்ள காட்டுத் தீ எனக் கூறப்படுகின்றது. கடந்த ஆண்டும் இதுபோன்ற தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும், இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள ஜாம்பீ தீயால், பல லட்சம் ஏக்கர் நிலங்கள் எரிந்து வருகின்றன. இதனைக் கண்டுபிடிப்பதற்கு மிகவும் சவாலாக இருப்பதால், இந்த தீ எங்கிருந்து பரவியது என்பதைக் கண்டுபிடிக்க செயற்கைக்கோளினைப் பயன்படுத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.

சைபீரியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் காரணமாக, ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளன. பனிப்பாறைகளுக்குக் கீழ் உள்ள, மண்ணானது தற்பொழுது தன்னுடைய வலிமையை இழந்து, ஸ்திரத்தன்மை அற்றதாக மாறியுள்ளதாம்.

இதனை, அந்நாட்டு விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த நிலைத் தொடர்ந்தால், விரைவில் ஆர்க்டிக் பனிப்பாறைகள் உருகும் அபாயம் ஏற்படும் என கவலைத் தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இதனால், கடல்மட்டம் உயரும் எனவும் கூறுகின்றனர். ஒரே நேரத்தில் இந்த உலகத்திற்கு எவ்வளவு அடி. முடியலடா சாமி!!!

HOT NEWS