சரியாக பத்து வருடங்கள் கழித்து, ஜாம்பீலேண்ட் படத்தின் இரண்டாவது பாகமான ஜாம்பீலேண்ட் டபுள் டேப் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தினைப் பற்றி பார்க்கும் முன், இதன் சிறப்பினைப் பற்றிப் பார்ப்போம். படம் முழுக்க, காமெடி, இரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகள், ஜாம்பீ வேட்டை என ஒரு கமர்ஷியல் எண்டெர்டெயினராக செல்லும். உங்களுக்கு, நல்லதொரு எண்டெர்டெயின்மென்ட் வேண்டும் என்றால், இந்தப் படத்தினை நீங்கள் பார்க்கலாம்.
தற்பொழுது மட்டுமல்ல, கடந்த 15 முதல் 20 வருடங்கள் பல ஜாம்பி படங்கள் வெளியாகி இருக்கின்றன. வாக்கிங் டெட் என்ற நாடகமும் வெளியாகி, பாக்ஸ் ஆபிசில் சக்கைப் போடு போட்டு உள்ளன. அந்த வரிசையில், மினிமம் க்யாரண்டியுடன் வெளி வந்துள்ள திரைப்படம் தான் ஜாம்பீலேண்ட் டபுள் டேப்.
சென்றப் பாகத்தின் தொடர்ச்சியாக, இந்தப் பாகமும் நீள்கின்றது. டல்லாஹஸ்ஸி, கொலம்பஸ், விச்சிட்டா மற்றும் லிட்டில் ராக் ஆகியோர் அமெரிக்க வெள்ளை மாளிகையில் தங்குகின்றனர். அப்பொழுது, கொலம்பஸ் தன்னுடைய காதலை அடுத்தக் கட்டத்திற்கு கொண்ட செல்ல முயற்சிக்கின்றான். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ள சகோதரிகள் இருவருமாக வெளியேற நினைக்கின்றனர். பின்னர் என்ன, புதிதாக வரும் நபர்கள், தாக்க நினைக்கும் ஜாம்பிகள், அவைகளை எவ்வாறு இவர்கள் பந்தாடினர். காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் மீதிக் கதை.
இப்படம் முழுக்க, காமெடியும் சண்டையும் பிரதானமாக அமைந்துள்ளதால், இளசுகளுக்கு மாபெரும் விருந்தாக அமைந்துள்ளது இந்த ஜாம்பிலேண்ட்.