ஜாம்பி திரைவிமர்சனம்!

06 September 2019 சினிமா
zombie.jpg

இந்தியாவிலும் இப்பொழுது, ஹாலிவுட் சினிமாவினைப் பார்த்து, பல வித்தியாசமான கதைக்களத்துடன் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வரிசையை முதலில் ஆரம்பித்தவர் எம்ஜிஆர். பின்னர், அடுத்தடுத்து பல நட்சத்திரங்களும், இல்லை இல்லை, பல நடிகர்களும், அந்த வரிசையில் படம் எடுத்து நட்சத்திரங்களாக மாறிவிட்டனர். இதனை கொஞ்ச காலம் மறந்திருந்த தமிழ் சினிமா, தற்பொழுது மீண்டும் ஆரம்பித்து இருக்கிறது.

இந்தியாவிலும் இப்பொழுது, ஹாலிவுட் சினிமாவினைப் பார்த்து, பல வித்தியாசமான கதைக்களத்துடன் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வரிசையை முதலில் ஆரம்பித்தவர் எம்ஜிஆர். பின்னர், அடுத்தடுத்து பல நட்சத்திரங்களும், இல்லை இல்லை, பல நடிகர்களும், அந்த வரிசையில் படம் எடுத்து நட்சத்திரங்களாக மாறிவிட்டனர். இதனை கொஞ்ச காலம் மறந்திருந்த தமிழ் சினிமா, தற்பொழுது மீண்டும் ஆரம்பித்து இருக்கிறது.

படத்தில் நடித்துள்ள அனைவருமே, கிட்டத்தட்ட நட்சத்திர அந்தஸ்திற்காக காத்திருக்கும் கடும் உழைப்பாளிகள். யோகி பாபு நட்சத்திரம் தான் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவர் இன்னும் பல தூரம் செல்ல வேண்டி உள்ளது. சில காலமாக, அவருடையப் பேச்சில் நகைச்சுவை இல்லை, வார்த்தைகள் மட்டுமே உள்ளன. போகின்ற போக்கினைப் பார்த்தால், அவரும் நம்ம பரோட்டா சூரியைப் போல, மாறிவிடுவார் போல.

சரி படத்திற்கு வருவோம். ஒன்றும் மெடிக்கல் ஸ்டூடண்டாக நம்ம பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். கோபி, சுதாகர் மற்றும் கோலமாவு கோகிலா புகழ் அன்புதாசன் (இவரும் யூடியூப் புகழ் உள்ளவர் தான்) மூவரும் நண்பர்கள். ஒரு நாள் சரக்கடிக்க பாருக்குச் செல்கின்றனர். அங்கு, நம்ம பிஜிலி ரமேஷையும், டி.எம் கார்த்தியை சந்திக்கின்றனர். பின்னர் ரிசார்ட்டுக் கிளம்பி செல்கின்றனர்.

இதற்கிடையில், அங்கு சண்டைப் போட்டுக் கொண்டு இருக்கும் யோகி பாபுவின் போனை திருடி விடுகிறார் பிஜிலி. அதனால், அவர்களைத் துரத்திக் கொண்டு யோகி பாபுவும் அந்த ரிஷார்ட்டிற்கு வருகின்றார். அங்கு யாஷிகாவின் நடனத்தைப் பார்த்து கிரங்குகின்றனர். அங்கு ஜாம்பித் தாக்குதலுக்கு சிலர் ஆளாகின்றனர். இதில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? அல்லது மாட்டிக் கொண்டார்களா? என்பது தான் மீதிக் கதை.

எப்பொழுதும், ஜாம்பி படம் என்றால், விஞ்ஞானிகளின் தவறுகளால் ஜாம்பிகள் உருவாகும். அல்லது ஒரு வைரஸ் மூலம் மனிதர்களுக்கு வரும். இந்தப் படத்தில், பண்ணையில் வளர்க்கப்பட்ட கோழிகள் மூலம், இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது. இதன் காரணமாக, மனிதர்கள் ஜாம்பிகளாகின்றனர் என்னும் புதிய யுத்தியை, வெற்றிகரமாகக் கையாண்டு உள்ளனர்.

படம் முழுக்க ஒரு நாள் இரவினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதனாலோ என்னமோ, பெரிய அளவில் ஈர்ப்பில்லாமல் இப்படம் போய்விடுகிறது. யோகிபாபு பேச மட்டுமே செய்கிறார். முன்னமே சொன்னபடி, சிரிப்பு என்பது வரமாட்டேங்குது. நீங்களும் சிரிக்க ட்ரைப் பண்ணிப் பாருங்க! இந்தப் படத்தில் வரும் முக்கியக் கதாப்பாத்திரங்கள் அனைவருமே, காமெடி நடிகர்கள். ஆனால், படத்தில் காமெடி தான் இல்ல.

யாஷிகா ஆனந்தைப் பற்றிக் கூற வேண்டும். படத்தில், முழுக்க மருத்துவக் கல்லூரி மாணவியாக வருகிறார் யாஷிகா. மருத்துவ மாணவியா இவங்கன்னுக் கேட்க வைக்கின்ற அளவுக்கு நமக்கு, தாராளமாக கண்களுக்கு விருந்து வைக்கிறார் நடிகை யாஷிகா. ஒரு சின்ன டவுசர், ஒரு பனியன் அவ்வளவு தான் யாஷிகாவின் உடை. நடிப்பிலும் பரவாயில்லை. முன்னிருந்ததை விட, சற்று முன்னேறி உள்ளார்.

படத்தின் இசையும் சுமாரான ரகம் தான். பிரேம்ஜி எதையோ செய்து நம்மை ரசிக்க வைக்கிறார். படத்தின் ஒளிப்பதிவும் நன்றாகவே இருக்கிறது. எதையோ செய்யப் போய், எதுவோ வந்துள்ளது என்பது தான், இந்த ஜாம்பி திரைப்படம். மொத்தத்தில் ஜாம்பி, கை சூம்பி.

ரேட்டிங் 2.5/5

HOT NEWS